அரிசி பற்றி பரவி வரும் கட்டுக்கதைகள் மற்றும் அதன் விளக்கங்களும்




நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் மிகவும் இன்றியமையாமல் இருப்பது அரிசி சாதம். இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அரிசியை உணவாக உட்கொள்கின்றனர்.

எனினும், அரிசியை பற்றி பரவலாக சில கட்டுக்கதைகள் வலம் வருவதால் அரிசி சாதம் சாப்பிடலாமா, அது உடலுக்கு நல்லதா என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுகிறது. அரிசியை பற்றி வரும் கட்டுக்கதைகள் என்னவென்று பார்க்கலாம்...

1. அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

அரிசியை பற்றி நிலவும் இந்த கட்டுக்கதை முற்றிலும் பொய்யானது. அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஏனெனில், அரிசியில் கொழுப்புச்சத்து இல்லை. அதுமட்டுமல்லாமல், அரிசி சாதம் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

2. அரிசி சாதத்தில் அதிக உப்புச்சத்து உள்ளது.

அரிசி சாதத்தில் உள்ள சோடியம் அளவு மிகவும் குறைந்த அளவு இருப்பதால் அரிசி சாதத்தில் உப்பு சத்து குறைவாகவே இருக்கிறது.

3. இரவு நேரத்தில் அரிசி சாப்பிடக்கூடாது.

அரிசி சாதம் எளிதில் செரிமானம் ஆவது மட்டுமல்லாமல், தூக்கத்தை ஏற்படுத்துகிறது. குளூக்கோஸ் அளவு அதிக அளவில் இருப்பதால் எளிதில் ஆற்றலாக மாறிவிடுகிறது. அதே நேரத்தில், பகல் நேரங்களில் அரிசி சாதம் சாப்பிடுவதால், அதில் உள்ள குளூக்கோஸ் கொழுப்பு சத்தாக மாறுகிறது.

4. அரிசி எளிதில் செரிமானம் ஆகாது.

இது முற்றிலும் தவறு. நம் வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலங்கள் அரிசியை எளிதில் செரிமானம் செய்யும் சக்தி வாய்ந்தது. கல்லீரலுக்கு மிகவும் நன்மை அளிப்பதாகவும் அரிசி இருக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, அரிசி சாதம் அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.

5. வெள்ளை அரிசியை விட சிகப்பு அரிசி நல்லது.

அதிக நார் சத்து இருப்பதால், சிகப்பு அரிசி நல்லது என்று பலர் கூறுகின்றனர். இதனால்தான் சிகப்பு அரிசியை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், இன்சுலின் சுரப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் சில தாது வகைகள் சிலவற்றை கிடைக்கப்பெறாமல் செய்துவிடுகிறது. அதனால், வெள்ளை அரிசியே உடலுக்கு மிகவும் நல்லது.

6. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி சாப்பிடக்கூடாது.

தயிர், குழம்பு, நெய் போன்றவற்றுடன் அரிசி சாதத்தை இந்தியர்கள் உட்கொள்கின்றனர். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் கூட அரிசி உணவுகளை சாப்பிடலாம். ஆனால், அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. அளவுக்கு அதிகமாக எதையும் உட்கொள்ளாமல், அளவுடன் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவேண்டும்.

Comments