இந்தியாவின் பாரம்பரிய உணவான அரிசி மட்டுமல்லாத, அது கழுவிய நீரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒன்றாகும்.
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அழகு சார்ந்த பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இந்த நீர் கூந்தலின் நீளத்தை அதிகரித்து, முடி பாதிக்கப்படுவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக அரிசி கழுவியதும் அதன் நீரை கீழே கொட்டிவிடுவோம். அதற்கு பதிலாக சருமம் மற்றும் கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.
முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.
இதனை சூடுபண்ணி அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். அவை இன்றும் கிராமபுறங்களில் பின்பற்றி வருகின்றனர்.
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

Comments
Post a Comment